பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/510

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

498

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காணப்படும் அறிவும் செயலும் ஏனைய உயிர்களிடத்தும் காணப்படுதல் வேண்டும். இங்ஙனமின்றி அவை. ஒவ்வோரிடத்திலும் ஒவ்வொன்றாகப் பல தரப்பட்டு நிகழக் காண்டலால், “உயிர் ஒன்றே” என்னும் முறை சிறிதும் பொருந்தாது. தண்ணீரின் அசைவால், தண்ணீரில் தெரியும் திங்களின் நிழலும் அசைவது போல் தோன்றிலும் திங்களுக்கு அந்த அசைவில்லை. அதுபோல உடம்பின் வினைகளால் உயிருடம்பின் உள்ளிருக்கும் உயிர், துன்புறுதல் தோன்றினும் ஒன்றே யாய அவ்வுயிர்க்கும் இயற்கையில் அவ்வினைத் தொடக்கு இல்லை. ஆயின், இந்த உவமை பொருந்தாது. உயிரின் சேர்க்கையின்றி உடம்பு ஒரு வினை செய்ய இயலாது.

உயிரைப் பொருத்தவரையில் நமது நாட்டு உலகாயுத வாதம் கூறுகின்ற கொள்கைகளும், லெனினியத்தின் கொள்கைகளும் உடன்பாடுடையன. அதாவது, உடலின் வேறாய் உயிர் என்ற ஒன்று இல்லை யென்பதாகும். இங்ஙனம் அவர்கள் கூறுவதற்கு அடிப்படைக் காரணம். அல்லது அடிப்படையானது. “கண்ணால் காணக் கூடியனமட்டுமே உண்மை, மற்றைய எல்லாம்-பொய்” என்ற கோட்பாடாகும். ஆய்வுக்கு அடிப்படையான இந்த அடிப்படைக் கோட்பாட்டிலேயே தவறு இருக்கிறது. உலகம் பரந்துபட்டது. அனைத்துலகத்தையும் அல்லது அனைத்துலக இயல்புகளையும், ஒரு பொறியால் கண்டு அனுபவித்தல் அல்லது உணர்தல் என்பது அருமை. அது எளியதல்ல என்பது மட்டுமன்று, இயலாததுமாகும்.

அதோடு, உலகிடை நிலவும் பல்வேறு பொருள்களுக்கும் ஓரியல்பு மட்டும் உரிமையன்று பல்வேறு இயல்புகளுண்டு. அப்பல்வேறு இயல்புகளையும் ஒரே நேரத்தில்-ஒரு பொறியால் அனுபவித்தல் இயலாது. அப்பொருளின் பல்வேறு இயல்புகளில், பல்வேறு பொறிகளும் தனித்தனியே தன்னியல்புக்கேற்றவாறு கலந்து, ஒரே பொருளில் ஒன்றிக்