பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/514

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

498

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மிகவும் சுலபம். ஐந்து விரல்களும் சடப்பொருள்கள் விரல்களுக்கு உயிர்ப்பில்லை. இயக்கினால் இயங்கும் தன்மையன. ஆனால் உயிரோ, உயிர்ப்பாற்றல் உடைய ஒரு பொருளாக இருக்கிறது. நாம் நீளம், அகலம், எடை போன்ற அளவுகளாலாய வேறுபாடுகளைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படவில்லை. இந்த வேற்றுமைகள், அவர்கள் கூறுவது போல இயற்கையாகவே யானாலும் ஆகட்டும். இங்கு நாம் உயிர்த் தொகுதிகளுக்கிடையே உள்ள வேற்றுமையென்று எடுத்துக் கொண்டது உயிர்ப்பாற்றல். உணர்வில் அறிவில் துய்ப்பாற்றில் உள்ள வேறுபாடுகளேயாம உயிர், தன்னிகரற்ற உயிர்ப்பாற்றல் உடையது. அதற்கொரு சான்று இதோ!

ஒன்றரை, ஒன்றரை ஒன்றரை அடிப்பரப்பளவுள்ளதும் இருபத்தைந்து பவுண்டுக்குக் குறையாத எடையுள்ளதுமான ஒரு பாராங்கல்லை, ஒரு கட்டைவிரல் பரிணாமமேயுள்ள ஒரு வேர் கல்லித் தூக்கித் தள்ளுகிறது; நிச்சயம் உருவக் காட்சியில் பாராங்கல்லே பெரியது. வேரோ சிறியது. ஆனால், இந்த வேர் எப்படிக் கல்லைக்கெல்லித் தூக்குகிறது? இந்த உயிர்பாற்றலும் கூட உயிர்வர்க்கத்தினிடையில் அளவில் கூடியும் குறைந்தும் இருப்பதைக் காண்கிறோம்.

புவிக்கும்-புழுவுக்கு மிடையில் உள்ள உயிராற்றல் தன்மை ஒரு மாதிரியானதல்ல; வேறுபட்டுக் கிடக்கிறது. அது போலவே, ஆணின் ஆற்றல்களும் நுகர்வுப் புலன்களும், உணர்வுகளும் பெண்ணின் இயல்புக்கு முரண்பட்டன. இம்முரண்பாடு இல்லையாயின் கவர்ச்சியுமில்லை; வாழ்க்கையுமில்லை. இந்த வேறுபாடுகளையும் வெறும் சுபாவம் என்று மட்டும் கூறமுடியுமா? என்பது ஆய்வுக்குரியது.