பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இது கருங்கல்லாலான திருக்கோயில். இத் திருக்கோயிலில் இராமகாதை, முழுதும் கருங்கல்லில் சிற்பமாகச் செதுக்கப்பெற்றுள்ளது. இந்தோனேஷியா கருங்கல்லில் தலைநகரிலும் ஜாகர்த்தாவிலும் பழைய சிவாலயங்கள் அமைந்துள்ளன.

பாலித் தீவில் நமது சமயம் பரவியிருந்த தடயங்கள் பல கிடைத்துள்ளன. அங்குள்ள மக்கள் திருநீறு போன்ற ஒரு பொருளை இன்றும் அணிந்து கொள்கின்றனர். இந்தோனேஷியாவில் உள்ள பல ஊர்கள் இராமகாதையில் குறிக்கப் பெறும் ஊர்ப் பெயர்களாக அமைந்து விளங்குகின்றன. அந்நாட்டில் கிராமியக் கலை நிகழ்ச்சிகளில் இராமகாதை நாட்டிய நாடகம் முக்கிய இடத்தை வகிக்கிறது. ஏன்? இன்றும் சோவியத் தலைநகராகிய மாஸ்கோவில் திராவிடக் கலை இலக்கியக் காட்சியகம் ஒன்று அமைந்துள்ளமை, பெருமைக்குரிய செய்தி. பண்டைக்காலத்தில் இந்தியா உணர்வினால் ஒரு நாடாக அமைந்து விளங்கியது. இன்று அரசியல் புகழ்பெற்று விளங்கும் நடுநிலைக் கொள்கை-அணிசேரா நாடு என்ற கொள்கைகள். பழந்தமிழகத்திலேயே வழக்கிற்கு வந்துவிட்டன. பாரதப் போரில் ஈடுபட்டிருந்த கெளரவர் படைகளுக்கும் பாண்டவர் படைகளுக்கும் சோறு அளித்துப் புகழ்பெற்றவன் பெருஞ்சோற்று உதயன் சேரலாதன் என்பது புறநானூறு கூறும் செய்தியாகும்.

"அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்"

(புறம் - 2)

என்பது அறியத்தக்கது.

சீன நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் அரசியல் தொடர்பு இருந்தது என்று சீன வரலாறு கூறுகிறது.