பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நம்மிடம் குறிப்பிட்டார்கள்.” அதுமட்டுமின்றி தலைவர் பெரியார் அவர்களுடைய பொதுவாழ்வு அரும்பி மலர்ந்தது, காங்கிரஸ் மகாசபையின் மூலமேயாகும். ஆனால், மனம் வீசுவது திராவிடர் கழகச் சமூக இயக்கத்தினாலேயேயாகும்.

சமூகப் பெரியார்

தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராக-தலைவராக எல்லாம் இருந்து பணிசெய்திருக்கிறார். காங்கிரஸ் தாபனத்தின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கேரளத்தில், வைக்கத்தில் அறப்போர் நிகழ்த்தி வெற்றி பெற்று "வைக்கம் வீரர்" என்ற விருதும் பெற்றார். பின்னர், காங்கிரஸ் தாபனத்தில் ஏற்பட்ட சில கருத்து வேற்றுமைகளின் காரணமாக, அதை விட்டுப் பிரிந்து, சுயமரியாதைக் கட்சி-நீதிக் கட்சிகளின் மூலமாகப் பொதுப்பணி செய்து, அதன் பின் திராவிடர் கழகத்தைக் கண்டு, அதன் மூலம் பொதுப்பணி செய்து வருகிறார்.

இனநலக் காவலர்

அவருடைய கொள்கைகள் பலவாகத் தோற்றம் அளித்தாலும் அக்கொள்கைகள் அனைத்தும் “இனநலம்” என்ற ஒரே கொள்கையின் அடிப்படையில் அமைந்தவைகளேயாகும். சிலர் பெரியார் அவர்களுடைய இனநலக் கொள்கையை வகுப்புவாதக் கொள்கையாகக் காண் கின்றனர். அந்தப்படி மக்களிடத்தில் பிரசாரமும் செய்து வருகின்றனர். அண்மையில், பிரதமர் நேரு அவர்கள் தென் ஆப்பிரிக்காவின் “நிறவெறி”க் கொள்கையைக் கண்டித்துப் பேசும்பொழுது, வகுப்புவாதக் கொள்கைகளையும் வன்மையாகக் கண்டித்தார். அக்கருத்தைச் சித்தரிக்க வந்த தமிழகத்து ஏடு. ஒன்று, பிரதமர் நேரு அவர்கள் வகுப்புவாதத்தைக் கண்டிக்கும் அதே காலத்தில், தமிழகத்தில் முதல் அமைச்சராக-தலைசிறந்த ஆட்சியாளராக விளங்கிக் கடமை