பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/296

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இந்தி மொழியை எதிர்த்து இன்பத் தமிழ் முன்னிலைப் படுத்தப் பெறவில்லை. ஆங்கிலம்தான் முன்னிறுத்தப் பெற்றது. ஆங்கிலமும் கால நீட்டிப்புச் சலுகை பெறவே முன்னிலைப்படுத்தப்பட்டது. இதனால் அன்னை மொழி தமிழ் உரிமையை இழந்தது. தமிழர்களும் உரிமையை இழந்தனர். இதனால் தமிழரின் வளர்ச்சி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

மாநில மொழிகளின் வளர்ச்சி குன்றும்

இந்தி பாரத நாட்டின் தனி ஆட்சிமொழி ஆனால் மக்கள் மன்றத்தில் தனி மதிப்பினைப் பெறும். இந்தி பயின்றாலேயே அரசு அலுவல்களில் வாய்ப்பு உண்டு என்ற நிலை உருவாகும்; அதனால் எல்லோரும் இந்தி மொழியைக் கற்பர்: அரசின் ஆட்சி மொழிக்குத்தான் தனிச் சிறப்பு மக்கள் மன்றத்தில் கிடைக்கும்.

அரசு ஆட்சி மொழியைத்தான் அரசு வளர்க்கும். அம்மொழி வளர்வதற்கான் வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று இந்தியைத் தவிர இதர பாரத நாட்டு மொழிகள் வளராமைக்குக் காரணம் அவை அரசு மொழி என்ற உரிமையைப் பெறாமையே! அரசு மொழியாக ஏற்றுக் கொள்ளப் பெறாத மொழி அரசைப் பொறுத்தை மாற்றாந் தாய் நடைமுறையில் இருக்கும்.

அரசு மொழியைச் சாராத இதர மொழியைப் பேசுபவர்கள், ஆட்சியில் உயர்ந்த இடத்தைப் பெறுதல் அரிது. ஆட்சி மொழியாக அமைந்திருக்கின்ற மொழியில் டேலினால் தான் பெருமை என்ற மனப்பான்மை மக்கள் மன்றத்தில் வேரூன்றும்.

பிற நாடுகளில்

ஆதலால், 'பாரதம் போன்ற பெரு நாட்டிற்கு ஒரு மொழி ஆட்சி மொழி என்ற கொள்கை எந்த வகையிலும்