பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/367

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

351


கால்நடைகள் வெற்றுத் தரையை முகர்ந்து முகர்ந்து அழிகின்றன. கால்நடைச் செல்வத்தில் கவனம் செலுத்தத் தவறினால் இன்னும் ஒரு நூற்றாண்டில் கொடிய பஞ்சத்திற்கு இரையாகி அழிவோம் என்பதை அறிய வேண்டும். கிராமங்களில் ஒவ்வொரு கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்தையும் கூட்டுறவு ஆடு வளர்ப்போர் சங்கத்தையும் சிறப்புடன் இயங்கச் செய்ய வேண்டும். இந்தச் சங்கங்களுக்கு முறையே மாடு ஒன்றுக்கு 5 செண்டு ஆடு ஒன்றுக்கு 1 செண்டு என்ற கணக்கில் பசும்புல் வளர்க்க மேய்ச்சல் தரை அமைக்க அரசு புறம்போக்கு நிலங்களை "ரெவின்யூ காடுகளை” பஞ்சாயத்து நிலங்களை உடனடியாக நீண்ட காலக் குந்தகைக்கு ஒதுக்க வேண்டும். பசும்புல் வளர்க்கவும் மேய்ச்சல் தரை அமைக்கவும் ஆகும் மூலதனச் செலவுகளுக்கு - நிலச் சீர்த்திருத்தம், ஆழ்துளைக் கிணறு அமைத்தல், நீர் இறைவை இயந்திரங்கள் பொருத்துதல் ஆகியவற்றிற்கு 50 சதவிகிதம் தொகை மான்யமாகவும் மீதி 50 சதவிகிதம் தொகை 4 சதவிகிதம் வட்டிக்கு நீண்ட காலக் கடனாகவும் கொடுத்து உதவ வேண்டும். நடைமுறைச் செலவுகள் 4 ஆண்டுகளுக்கு முதலாம் ஆண்டு 100 சதவிகிதம் இரண்டாம் ஆண்டு 70 சதவிகிதம், மூன்றாம் ஆண்டு 50 சதவிகிதம், நான்காம் ஆண்டு 50 சதவிகிதம் மான்யமாகவும் கொடுத்து உதவ வேண்டும். இதற்கிடையில் கூட்டுறவு சங்கங்களின் நில ஆதாரம் பலப்பட்டுவிடின் அரசு மான்யம் கொடுப்பதை நிறுத்திவிடலாம்.

கால்நடை துறையில் நமது அரசுகள் கடந்த பல ஆண்டுகளாகக் கிராமப் புறத்திற்கு வழங்கியுள்ள பணம் கோடிக் கணக்கில் ஆகும். ஆயினும் உருப்படியாக எதையும் காணோம். பசும்பொன் தேவர் திருமகன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. அ. இளங்கோவன், இ.ஆ.ப. கூறியது போல "ஒரே மாட்டைக் காட்டி 40 பேர் கடன் வாங்குகிறார்கள்" ஊரக ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ஆடு,