பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/457

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

441


விடுதலை கிடைத்தது. ஆயினும் நாம் தொடர்ந்து இந்த நிலையைக் கடைப்பிடிக்கவில்லை என்பது உண்மை மட்டு மல்ல; வருந்தத் தக்கதுமாகும்.

மதம், மனித நேயத்தை வளர்க்க வேண்டும். மத அவநம்பிக்கைகளையும், கோழைத்தனத்தையும் வளர்க்கிறது என்று – கார்ல் மார்க்ஸ் எழுதினார். தத்துவ ஞானிகளின் நோக்கம் மனிதகுல விடுதலையாகவே இருக்க வேண்டும். இன்று தேவை. உண்மையான – முரணில்லாத மனிதாபிமானமே! மலட்டுத்தனமில்லாத உயர்ந்த அன்பு நலஞ் செறிந்த நட்பே தேவை. தான் வேறு, பிறர் வேறு என்ற உணர்ச்சியிருப்பது தவறு அல்லவா? மனிதனின் ஆன்மா ஒளிப்பிழம்பாக வேண்டும். அந்த ஒளி, இந்த வையகம் முழுவதும் பரவி இருளகற்றி இன்பந் தரவேண்டும். நாம் மனித நேயத்தை மையமாகக் கொண்ட வாழ்வை வளர்ப் போம்! கார்ல் மார்க்சின் அடிச்சுவட்டில் கெட்ட போரிடும் உலகத்தைத் திருத்துவோம்!

கார்ல் மார்க்ஸ் மதக் கருத்திற்கு வளர்ச்சியில்லை என்றார். வளர்ச்சியைக் காண்போம்! உயர் நோக்கம் வேண்டும் என்றார்! மதச் சார்பான வாழ்நிலையில் உயர் நோக்கம் காண்போம்! ஒன்றே பரம்பொருள்! மனிதகுலமும் ஒன்றே! ஆம்! மதங்களுக்கு மனிதநேயமே உயர்நோக்கம்! பொதுமையே உயர்நோக்கம்! மனித நேயத்தை ஒழுக்கமெனக் கொள்வோம்! யாண்டும் எங்கும் பொதுமை காண்போம்! போற்றுவோம்!

5.5.90
57. பொருளாதார உறவுகள்

இனிய அன்புடையீர்,

மானுட வாழ்க்கையின் முதலும் முடிவுமாக விளங்கும் உந்து சக்தி பொருளாதாரமேயாகும் இந்தக் கொள்கைக்கு உடன்படமாட்டார்கள், மதநம்பிக்கை உடையவர்கள்!