பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/482

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

466

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உவப்பன செய்! ஆல் போல் தழைத்துக் குடும்பம் வளரும்; உறவு வளரும்.

குடும்பத்தின் வளர்ச்சிப் படிகளில் ஏறும் பொழுதெல்லாம் அவர்களிடம் ஆலாசனை பெறத் தவறாதே! நல்ல நாள்களில் குடும்பத்துடன் வந்து மாமனார், மாமியாரை வணங்கி வாழ்த்துப் பெறவும் தவறாதே! நல்ல குடும்பப் பாங்குடன் நடந்துகொள்! வெற்றி பெறுவாய்.

மகிழ்ச்சியுடன் உன் மனையறம் சென்று கொண்டிருப்பது மன நிறைவைத் தருகிறது. மகிழ்ச்சியைத் தருகிறது. அதுசரி! குடும்ப வரவு-செலவு இருக்கிறது. குடும்பப் பொருளாதாரம் முக்கியமானது. அதனால் வரவு-செலவுத் திட்டமிட்டுக் குடும்பத்தை நடத்துகிறாயா! நமது நாட்டு அரசாங்கங்களைப் போலப் பற்றாக்குறை நிதி நிலையுடன் வாழ்கிறாயா? நாட்டின் அரசுகளுக்குப் பற்றாக்குறை வரவு-செலவுத் திட்டம் இருப்பது நல்லதல்ல. ஆயினும் தீமையாகாது. ஏன் எனில் பரந்துபட்ட மக்கள் தொகையுடன் சம்பந்தப்பட்டது, அரசின் வரவு-செலவுத் திட்டம். ஆனால், குடும்பம் வரவுக்குத் தக்க செலவுதான் செய்ய வேண்டும். குடும்பப் பொருளாதாரத்திற்குப் பிறிதொருவரை, நெருங்கின சுற்றத்தாரைக்கூட, தந்தை, தாய், மாமன், மாமியாரைக் கூடச் சார்ந்து வாழ்தல் கூடாது. அதனால் திருவள்ளுவர், குடும்பத் தலைவியை, “வளத்தக்காள் வாழ்க்கைத்துணை” என்றார். முன்பு ஒரு கடிதத்தில் இதுபற்றி எழுதியிருப்பதை மீண்டும்படி.

பொருள் நலம் பேணல் குறித்துத் திருவள்ளுவர் அருமையான நெறிமுறைகளை வகுத்துத் தந்துள்ளார். தேவைக்கேற்பத் தாமே முயன்று பொருள் ஈட்டுதல் நன்று. அஃது இயற்கையாகப் பலருக்கு இயலாத ஒன்று. ஆதலால் வருவாய் பெருகி வளரவில்லையெனில் கவலைப்பட்டு என்னாவது? மற்றவர் கைப்பொருளை எதிர்பார்ப்பதும்