பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மக்களாட்சி முறை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கொள்கை உலகம் முழுவதிலும் மனிதன் இந்தச் சுதந்திரத்திற்காகப் போராடிப் போராடி இந்த உரிமையைப் பெற்றிருக்கிறான். அப்படிப் பெற்றது ஆளுவதற்கோ, ஆதிக்கத்திற்கோ அல்ல. சுதந்திர நாட்டில் ஆளும் இனம், ஆளப்படும் இனம் என்ற வேறுபாட்டிற்கு இடமே இல்லை. ஆட்சி முறை என்பது நல்வாழ்விற்கு உரிய நடைமுறை அமைப்பேயன்றி ஆதிக்கத்திற்காக அன்று. சுதந்திர நாட்டில் நாட்டின் குடியரசுத் தலைவரிலிருந்து கிராமத்தின் ஆட்சித் தலைவர் வரை அனைவரும் சமுதாயத் தொண்டர்கள்- காவலர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆதலால் ஊராட்சி மன்றங்களில் பொறுப்பேற்றிருக்கின்ற நாம் நல்லெண்ணத் திற்கும், நம்பிக்கைக்கும் உரிய குடியாட்சி முறையை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.


6. [1]வாக்கும் வாழ்வும்

ம்முடைய சுதந்திரபாரத சமுதாயத்தை இரண்டு வழிகளில்-வெவ்வேறல்ல - ஒன்றுபட்ட - பண்பின் வழிப்பட்ட துறைகளில் செழுமைப்படுத்தி வளர்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். ஒருவழி மக்களாட்சி-, மற்றையது கூட்டுறவு வாழ்க்கை, வளர்ந்து வாழவிரும்பும் சமுதாயத்திற்கு இவ்விரு கொள்கைகளும் விழிகள் போலவாம். நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, பல தேர்தல்கள் (பொதுத் தேர்தல்கள் மட்டுமல்ல) நடைபெற்றிருந்தும்கூட நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மக்களாட்சி முறைக்கேற்ற செழுமை வளரவில்லை - கூட்டுறவுப் பண்புகளும் வளரவில்லை. அதுமட்டுமன்று. அவைகளுக்கு மாறாகக்கூடப் பலதடவைகளில் சொந்த


  1. மண்ணும் விண்ணும்