பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

94


வேளாண் மைத்தொழில் வித்தக மாகும்
மனித குலத்தின் மாண்பினை அழிக்கும்
தீமையைக் களையெனக் கருதி எடுத்தல்
நன்றாம் என்றிடும் நமது வள்ளுவம்!
கம்பன் கண்ட வாறு மானிடம்
வெற்றி பெற்றிட வேண்டினால் வேற்றுமை
யாவை யும்களை யெடுத்திட வேண்டும்!
கடவுள் வென்றார்! தேவர்கள் வென்றனர்
என்ற நியதியைக் கம்பன் மாற்றி
“மானிடம் வென்றதம் மா!”என வுரைத்தான்!
ஆம்! ஆம்! மானிடம் வென்றிட வேண்டும்!
கம்பன் கண்ட மானிட வெற்றி
உயிர்க்குல மனைத்தின் ஒருமைப்பா டாகும்!
வேற்றுமை கருதேல்! விரிந்தமா னிடத்தின்
ஒருமைப் பாட்டினை உன்னுக! உன்னுக!
இல்லார் உடையார் எனும்இரு நிலைகள்
எக்கா லத்திலும் வேண்டவே வேண்டாம்!
கல்வி கேள்வியால் மானிடச் சாதியின்
பொறிகளும் புலன்களும் செழித்து வளர்க!
ஒருமைப் பாட்டினில் ஊன்றிநின் றிடுக!
பொதுமை காணும் நோன்பியற் றிடுக!
தனக்கென முயலும் பேதைமை தரணியில்
பகுத்தறி வற்ற உயிர்கள்பா லில்லை!
பகுத்தறி வுள்ள மனிதனே இதுஏன்?
மண்செழித்திடில் மரம்செ ழித்திடும்;
மரம்செழித்து மண்செழித் த(து)இல்லை!
மன்பதை உலகம் செழித்தபின் தான்நின்
வாழ்க்கை செழித்திடும் என்பது அறிக!
உலகம் ஒருபெரும் வீடு! அதனுள்
உன்றன் வீடு ஒருசிறு மூலை!