பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எடுத்து இயம்புவார் கவிஞர் அபிபுல்லா
அவர்கவி படிப்பினை ஆகிடும் நமக்கே!

முடிப்பு:

படிப்பு வளருது எனப்பாட வந்த
புதுமைக் கவிஞர் அபிபுல்லா
படிப்பின் பயனா கியநல் லறிவைத்
தேடுக என்றார்! விரிவிலா மானிடம்
கிழித்த எல்லைக் கோட்டினைக் கடந்து
அறிவினைத் தேடல் செய்குவோம்! அனைவரும்!
வினா - விடை களில் மலி வான சரக்கு
வேண்டாம்! ஞானம் தேடுவோம்! அடைவோம்!
உண்மையை ஆடம் பரத்தி னின்றும்
மீட்போம்! மண்மேல் விளங்கிடச் செய்வோம்!

கவிஞர் மரியதாசு - அறிமுகம்


உழவொடு தொழிலும் ஒருங்குநன் கிணைந்து
வளர்ந்தால் தான்இவண் மாந்தர்தம் வாழ்நிலை
உயரும் என்பது உண்மை. தெருவெலாம்
தொழில்கள் பெருகி வளருதல் வேண்டும்
உழைக்கும் கைக்கே உணவினை அள்ளும்
உரிமை உண்டு! அந்தநல் உழைப்பு
பெருகிடத் தொழில்கள் பெருகிட வேண்டும்
நாட்டினில் தொழில்கள் பெருகுது என்று
நமக்குத் தொழில்கவி தைஎன்று நவின்ற
பாரதி மரபில் வந்தநற் பாவலர்
சந்தக் கவிஞர் மரிய தாசு
கவிதை முழங்குவார் செவிமடுப் பீரே!