பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

95


முடிப்பு:

மாத்தமிழ்க் கவிஞர் மரிய தாசு
தொழில்பெரு குதுஎனச் சொல்லியகவிதை
கவிதையா? அல்ல!அஃ தோர்ஆ வேசம்!
நந்தம் நாட்டினை நாடொறும் வளர்க்கத்
தொழில்பல செய்து வளமுடன் வாழ்கவே!

கவிஞர் பழநி.இளங்கம்பன் - அறிமுகம்


நந்தம் வாழ்க்கை நாளும் மகிழ்வுற
நமக்குத் தேவை நல்ல செல்வமே!
பணம்எனப் படுவது பயம்தரும் பூதமாய்
உயர்ந்து நிற்கிற ஒருகா லம்இது!
செல்வம் - பணம்எனத் தேறுதல் பிழையாம்
மனிதன் வாழ்ந்திடற் குரியநுகர்வுப்
பொருள்களே செல்வம்! பொதுமறை திருக்குறள்
“வேண்டின்உண் டாகத் துறக்க” என்றது.
இந்தத் தத்துவப் பொருளே பழநியில்
ஆண்டியாய் நிற்கும் அவன்திருக் கோயில்
செல்வச் செழிப்பில் சிறந்து திகழ்வது!
திருக்குற் றாலத் தருவிக் கவிநடை
பழநிப் பஞ்சா மிர்தம் எனச்சுவை
ததும்பிடும் கவிதை ‘தரும்’இளங் கம்பன்
“செல்வம் வருகுது!” எனக்கவி நல்குவார்
செல்வம் சேர்க்கும் ஆர்வம்மிக் குடையீர்!
தமிழ்இளங் கம்பன் தாரார் செல்வம்!
பொருள்செய் புதிய முயற்சிகள் காட்டுவார்!
செவிமடுத் திடுவீர்! செயலினைத் தொடங்குவீர்!