பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆக்குக! அப்படி வளரும்அப் பொழுதே
சாத்திரம் தழைத்து வளரவேண் டாமா?
தாத்தா தனது பேரனுக்குச் சட்டை
தைத்து வைத்தலும் சகத்தினில் உண்டோ?
இன்றைய தலைமுறைக்கு இசைந்துவா ராத
சாத்திரம் அனைத்தையும் மாற்றி வளர்த்துப்
புத்துருக் கொடுமின்! பழைமை புதுமையை
ஈன்று தருதல் வேண்டு மல்லவா?
மகப்பே றிலாத மகளிர் மலடென
ஆனது போலப் புதுமைஈ னாத
பழைமையும் பயனற் றதுதான்! எனவே
சாத்திரம் புதுக்கி வளருமின்! இங்கே
நியாயம் தேர்ந்து தெளிந்திடு வீரே!
நேர்மை யென்பது யாது?கூறுவீர்!
இரண்டுபுள் ளிகளை இணைக்கும்ஒர் கோடு
நேர்கோ டாகும்! ஆரொரு வர்க்கும்
இசைவாய் இருப்பதே நேர்மை யெனப்படும்!
நியாயம் தெரிந்த சமுதா யத்தினில்
கலகம் இல்லை; காழ்ப்புகள் இல்லை!
நியாயம் நிலவிடும் ஊரினில் காவல்
தேவையே இல்லை!
இன்று நல்ல காலமும் இல்லை
என்பதே உண்மை யாயினும் எதிர்வரும்
இருபத் தோராம் நூற்றாண் டுக்கு
அழைத்துச் செல்கிற ஆயத்தம் உண்டு
மூத்த தலைவன் முன்னே செல்கிறான்
இந்த இருபதாம் நூற்றாண் டுடனே
சாதிச் சனியன் தொலைந்துபோ கட்டும்!
மதவெறிக் கலகம் மறைந்துபோ கட்டும்!
பிறர்தம் பங்கைத் திருடிச் சேர்த்திடும்