பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்களும்

111


5. தவத்திரு சாந்தலிங்க இராமசாமி

அடிகளார் அருளாட்சி வெள்ளிவிழா

வாழ்த்து

15-7-92

        தண்தமிழ் நாடதனில்
        உழவும் தொழிலும் செழித்து வளரும்
        மேலைச் சிதம்பரம் என்று சேக்கிழார்.
        போற்றிப் புகழ்ந்த பேருர் அதனில்
        ஒன்றாக நல்லது கொல்லாமை என்று
        அறம் கூறித்
        தவஞா னத்தால் ஆன்மாக்களை
        உய்யும் நெறியில் உய்த்துச் செலுத்திய
        தகைமைசால் சாந்தவிங்கத்
        தவமுனிவர் கண்ட தவமேவு திருமடத்தில்
        பயிற்றிப் பலகல்வி தரும் கல்விக குரிசிலாய்
        அருட்குருவாய்த் திகழும் எம்
        சாந்த லிங்க இராமசாமி அடிகள்
        நன்மை பெருகு அருள்நெறி நயந்தினிது வளரத்
        தமிழ்உரை நிகழ்த்தும் தமிழ் அடிகள்!
        நின்புகழ் போற்றுவம்!
        நந்தமக்கு நீயே நயந்துவந்து
        நின்னைத் தோழமை யாகத் தந்தனை!
        நம் வாழ்க்கைப் பயணத்தில்
        நீ, மறைவாகச் செய்த மடைமாற்றம்
        எத்தனை, எத்தனை?
        நினைப்பின் நெஞ்சு நெக்குருகி நெகிழ்கிறது!
        எம் அடிகள்! நினக்கொரு விண்ணப்பம்!