பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்களும்

113




4. தவத்திரு சுந்தர சுவாமிகள்
மணிவிழா வாழ்த்து
31-10-1989

        பூவுல கத்தில் புண்ணிய நாடாம்
        பாரதத் தினில்தண் ணிர்மையும் தவமும்
        வளர்த்துப் புகழ்பூத் திட்ட வண்டமிழ்
        வழங்கும் பெருநாட் டில்மறு வில்லாக்
        கொங்குநா டதனில் நந்தமிழ்க் குடியினர்;
        தம்தலை தாழ்ந்து வணங்கும் முருகன்
        என்னும் பெரும்பெயர் எழில்மிகு கடவுளின்
        குடிமுழு தாண்டு நெடிதுகாத் தருளும்
        இணைமலர் நோன்றா வரினைப்பிரி யாது
        மறவா தேத்தும்கெள மார மடத்தில்
        செந்தமி ழுருவாய்ச் செழுங்கவி முகிலாய்த்
        தொண்டெனும் தூய உயிரினைத் தாங்கித்
        திருப்பணி நாயக ராய்ச்சிறந் தோங்கும்
        சுந்தரத் தமிழே யாகிய நந்தம்
        சுந்தரம் அடிகாள்! நின்பாற் பழகினம்!,
        கூட்டு வித்த உழுவ லன்பினை
        மனமார வாழ்த்து வம்!திரு வதிகை
        உடன்பா டென்றும்நம் உளத்தில்நின் றாலும்,
        நின்னோ டோடி வரவிய லாமல்
        போயினும் நடந்து வருதல்நம் முயற்சியே
        என்றும் இளையராய்ப் பொன்றா எழிலுடன்
        செந்தமி ழினையும் சிவநெறி யினையும்
        செவ்வேள் முருகன் தண்ணருள் திறத்தையும்
        காத்து வாழ்க! நாம் இன்புற
        வாழ்க நீ யென்று வாழ்த்துகின் றோமே!