பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


        முன்னோன் ஆகலின் அம் "மனு நீதி நாள்"
        கண்டனை' நின்றன் கொற்றத் தேவலர்
        சிற்றுரர் முதலாப் பேரூர் வரையிலும்
        சுற்றிச் சூழ்ந்து மக்களுக் குற்ற
        'குறைகளைக் கேட்டுக் குறித்த நாட்களில்
        விடைதரு கின்றனர்! இடர் ஒழி கின்றது!
        குறைதீர் நின்றன் கொற்றம்
        ஏறுயர்த் தோன்அருள் என்னவா ழியவே!

(3)

திணை: பாடாண் திணை துறை: வாழ்த்தியல்

        வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
        தமிழ்கூறும் நல்லுல கத்து
        முடியுடை வேந்தர் பற்பலர் தம்புகழ்
        நாட்டிச் சிறந்தனர் நம்வர லாறிது.
        தண்ணளி சேர்ந்த தமிழக மண்ணில்
        விஞ்சிய புகழின் வேந்தர்கள் வடபுலம்
        கண்டும் கங்கை யாற்றினைக் கொண்டும்
        பனிமலைச் சாரலில் பயின்று உலாவியும்
        வெற்றியின் சின்னம் விளங்கஊர்ப் பெயர்கள்
        தமிழெனத் திகழத் தகுபெயர் மாற்றிப்
        பெரும்புகழ் பெற்றுப் பிடுற் றனரே!
        நீயும்,
        தண்டமிழ் வரைப்பினில் தாரணி அனைத்தும்
        புகழோங் கியதமிழ்ப் புறநானூறு
        கொண்டகொற் றமெனப் பழந்தமிழ்ப் பெயராம்
        கல்லக் குடிப்பெயர் கண்டனை! இஃது
        பெயர்மாற் றமல. பெரும்பெயர்க் கொற்றம் நீ
        பெற்றவோர் பீடுசால் வெற்றியே யாகும்!
        வளமார் தமிழின் வரம்பிலா ஆற்றலை