பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

        வடபுலம் உணர வாய்த்தவோர் சின்னம்!
        தமிழக அரசு இமிழ்கடல் வரைப்பில்
        வசையிலாத் தமிழனின் மானம் போற்றிடப்
        பேணிய பெரும்புகழ் ஆர்ந்த
        வரலா றிஃதுநின் கொற்றம் வாழியவே!

(4)

திணை: பாடாண் திணை துறை: பரிசில் துறை

        பூவுல கம்பொலி வுறப்புகழ் பூத்த,
        பொன்னிச் செல்வி, பொய்யாக் குலக்கொடி
        காஅ விரித்துக் காதல் வளர்க்கும்
        காவிரி நாட! பாவிரி கலைஞ!
        நாடா வளத்தது நும்.நா டாகும்!
        நாடிநின் அடைந்தோர் கேட்டினை நீக்கி
        ஏற்றமுற் றனைநினை நாடா ரிடத்தும்
        நண்ணி நாடொறும் நயமே யாற்றினை!
        நாமக்கல் லாரும் நெல்லை யப்பரும்
        நின்கொடை யால்மனத் தின்படை கின்றனர்;
        நாளும் மக்கள் குறையினை நாடி
        முறைமை தேர்ந்து நிறைவுற முடிப்பாய்
        'நாளை என்றொரு சொல்நினை நாடினோர்
        கேட்டது மில்லை! மாற்றுவை அவலம்!
        உயர்தமி ழே, நின் உயிர்மூச் சாகும்;
        பண்டைத் தமிழப் பண்புநின் இலக்கு!
        என்றறிந் தேம்யாம் இன்றுனை எய்தினம்
        ஆயி ரத்துமுந் நூறியாண் டின்முன்
        ஏழாம் நூற்றாண் டெழு, தமிழ் ஞாயிறு!
        அயல்வழக் கதனை வென்று செழுந்தமிழ்
        வழக்கை வாலி தாக்கிய மாண்பினர்
        அப்ப ரடிகளின் செப்பரும் புகழ்தமிழ்