பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்களும்

127


9. மணிவிழாச் செல்வர்
நா. மகாலிங்கம் வாழ்க!

        ஞாயிறு திரிதரு ஞால மதனில்
        திசையெலாம் புகழும் தென்தமிழ் நாட்டில்
        கோதி லாத்தமிழ் கொழித்து வளர்ந்திடும்
        கொங்குநா டென்னும் தங்கநா டதனில்
        பூமகளுக்குப் பூவணி யென்னப்
        பொலிந்து விளங்கிடும் பொள்ளாச்சி நகரில்
        நல்லதோர் நாச்சி முத்தெனும் அன்பர்க்குச்
        செந்தமிழ் மொழியும் சிவநெறி யோடு
        சீலசன் மார்க்கமும் சிறந்து பயனுறத்
        தோன்றிய தோன்றல் ஆன்றபண் பாளர்
        மாசி லாப்புகழ் மகா விங்கம்
        திருவேறு தெள்ளிய ராதல் வேறெனும்
        பொய்யா மொழியும் பொய்க்கும் படியாய்த்
        திருவும் தெள்ளிய அறிவும் இவற்றினை
        நல்கும் அயர்விலா உழைப்பும் நயன்சேர்
        வண்மையும் திண்மையும் வளர்உயர் நோக்கும்
        உவமையில் பண்பும் ஒருசேர்ந் தியங்கிப்
        பொலிந்தனன் வாழ்க! நலஞ்சேர் மனையறம்
        புகழ்பெற வாழ்ந்து புதல்வரால் பொலிந்தனன்!
        மணிவிழா நாயக னாகிஇன் புற்றுத்
        தனிச்சிறப் பெய்தினன் தமிழ்போல் வாழ்கவே!
        பெருமைசால் பெரியோன் பின்னும்ஆ யிரம்பிறை
        கண்டுவாழ்ந் திடுக! மண்திளி ஞாலம்
        சாதி சமயச் சழக்கினைச் செய்து
        அல்லற் பட்டழி கின்றது அதனைச்
        சன்மார்க்க நெறிக்கீழ்த் தம்வயப் படுத்திப்
        புன்மார்க்கம் போக்கிப் புவியெலாம் வாழச்
        செய்துபல் லாண்டு சிறந்து வாழ்கென
        காளத்தி யண்ணல் கழலிணை
        நினைந்துவாழ்த் துகின்றோம்! நீடு வா ழியவே!