பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்களும்

135


15. கோபிநாத்

        கோபிநாத்! கவனமாகக் கேள்!
        உன்கடமை. அன்றாடம் செய்ய வேண்டியவை
        நாளை என்றால் விழித்துக் கொண்டிருப்பவர்கள்
                                                மேவிவிடுவர்
        உன்பணி எளிது! மிகவும் குறைவும் கூட!
        உன்பணி சிறக்காத தால்
        இழந்த இழப்புக்கள் பல!
        ஆண்டு வேலைத்திட்டம் அளித்தும்
        நீ பின்பற்றவில்லை!
        கிழமை வேலைத் திட்டம் ஒதுக்கீடு செய்தாலும்
        ஏற்றுச் செய்தாயல்லை!
        உன்துறையில் இன்று கடன்!
        ஊதியத்திற்குரியது இல்லை!
        ஏன், இந்த அவலம்?
        நீ இளைய வயதினன்'
        நின் நிலைமையை நினைந்து கவலைப் பட்டால்
        மாறலாம்! மாறுவாய்!
        மாறாக உனக்குக் கோபம் வருகிறது.
        உதவும்பணி உபத்திரமாகப் போகிறது!
        நீ, கவலைப்படமாட்டாயா?
        நீ, சாமர்த்தியமாகத் தெரியவில்லை என்கிறாய்?
        திறமையில்லை என்கிறாய்!
        இது உண்மையா?
        நின்னைச் சோம்பல் ஏவல் கொள்கிறது.
        உயர்மனப்பான்மை கொடிகட்டிப் பறக்கிறது!
        இவற்றைத் தவிர்த்து விடு!
        நின்பணி சிறக்கும்! நின்வாழ்வு சிறக்கும்!
        வளர்க! வாழ்க!