பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்கலும்

145


22. பொதுமைப் பொங்கல் பொங்குக!

தண்ணார் தமிழகத் தினில், தை முதல்நாள்
வரும்விழா பொங்கல் திருவிழா வாகும்!
வீடுக ளெல்லாம் வெள்ளை யடித்துப்
புதுக்கித் துரய்மைப் பொலிவுசேர்த் திடுக!
நமது வாழ்விலும் நலமில் லாத
பழமைகள் நீக்கிப் புதுமை பெறுக!
புத்தா டைகள் வாங்கி உடுத்துக!
அறிவி யற்புது வாழ்வைத் தொடங்குக!
செந்நெல் அரிசியில் செங்கரும் பின்சாறு
நன்னர் சேர்த்து நற்பொங்க விட்டு
உண்டு உடலுக்கு உறுதிசேர்த் திடுக!
செந்தமி ஜின்சுவை யூறும்நற் கருத்துகள்
உணர்வினுக்(கு) ஊட்டமாய்த் தினம்தினம் பெறுக!
உயிர்க்குல மனைத்தும் நமது வாழ்க்கையில்
ஒத்தி சைந்து நிற்பத னால்தான்
நமது வாழ்வு நடக்கிறது: ஒர்க!
நமது வாழ்வு பிறஉயிர்க் குலத்தின்
நலனுட னிசைந்து நடைபெறு கின்றதா?
என்று நாள்தொறும் எண்ணுக! வாழ்க!
பானையில் பொங்கல் பொங்கினால் போதும்ா?
வாழ்க்கையில் பொதுமைப் பொங்கல்
பொங்குக! எங்கும் தங்குக நலமே!