பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


24. தைத் திங்கள் தேவி!

மங்கல மனையின் கதவினைத் தட்டும்
ஒசை கேட்டு ஒடிக் கதவினைத்
திறந்தேன்! தைத்திங்கள் தேவிநின் றிருந்தாள்!
அன்ன நடைநடந் துள்ளே வந்தாள்!
வீட்டினுள் அவளை வரவேற் கின்ற
சூழல் இல்லை! தைத்திங் கள்அவள்
என்னை நோக்கி நகுதல் செய்தாள்!
"ஏன் இந்த உறக்கம்?
செல்வத்தின் ஊற்றாம் உழைப்பின்
உறுகளன்களும் உனக்குள்ளன!
ஏன் இந்தத் தளர்வு?"
"உழைப்பே தவம்” என்ற உறுதிமொழியை
                                        மறந்தனையோ?
உழைப்பவர் உள்ளமே ஈசன் எழுந்தருளும் கோயில்!
என்பதனை மறந்தனையோ?
“உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?” என்றாள்! -
"இல்லை! இல்லை! தாயே!
உழைப்பில் முறையாக உழைத்தேன்!
நாளும் உழைத்தேன்! ஆயினும் உறுபயன் காணேன்"
என்றேன்
உடன்பிறந்தோரே யாயினும்
திறமறிந்து உறவு கொள்ள வேண்டும்!
ஆள் கணக்குக்குக் கூட்டம் கூட்டினை!
அவர்கள் உன்னுடன் வரவில்லை! உண்மை!
ஏன்? நீ தனியே நடைபோட முடியாதா?
கண்ணை இமை காப்பதைப் போல
நின்கருமத்தில் விழிப்புடன் இருக்க இயலாதா? இயலும்!