பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்கலும்

1




நின்னை அழைத்திட நெடிதுகா முற்றனன்!
எனையழைத் திடாமல் தனிநீ ஏகினை!
பெரியோர் செய்கை பொருட்குறிப் புடையது
என நான் தேறிஇவ்வுடல் தாங்கினன்!
 எந்தை கயிலை ஈசன் தன்னிடம்
செந்தமிழ்ச் சுந்தரன் விண்ணப் பித்துச்
சேர மான்பெரு மாளைச் சேர
அழைத்துக் கொண்டது நீ அறி யாததோ?
உண்மையில் உன்னிடம் ஒரு விண்ணப்பம்
நின்னடி வேண்டுவன் யான் அஃதொன்று!
எந்தை கயிலை ஈச னொடு நீ
இனிது மகிழ்ந்துறைத் திருக்கும் போழ்தினில்
என்னையும் அழைத்திட எடுத்துக் கூறி
இனியஉத் தரவுபெற் றெனக்(கு) அதை யனுப்பி
அருளுக! நாளும்நின் அழைப்பை
நோக்கியே வாழ்தலை நோன்பெனச் செய்வனே.

கு. xiv.11