பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


28. என்ன கருதி எமக்குத் தந்தனை?
(அண்ணா)

வாழும் நெறியினை வகுக்கும் வள்ளுவம்
கோல உலகினிற் குடிநின் றுயர
பருவம் மடிமா னம்பா ராமல்
குடிசெய் கென்று குரல்கொ டுத்தது!
அக்குர லதற்கே அரும்இலக் கியமாய்
வாழ்ந்து வேறுபா டின்றி இனநலம்
கருதிக் கங்கு கரையிலா அன்பு
பொழிந்தபே ரறிஞன் அண்ணா கண்டோம்!
வாழுதல் கலையென மொழிந்தான் வள்ளுவன்
வள்ளுவன் நெறியும் அண்ணா நெறியும்
வாழும் வகைக்கிரு கால்க ளெனவே
கொண்ட கொண்டல் கொழி தமிழ்க் கலைஞர்
புதிய புறநா னுரற்றைப் படைக்கும்
புரவலர்; புரவலர் புரவல ராகப்
பிறப்பதோ டன்றிப் பரந்தகா லத்தையும்
வென்று நிற்கும் வியன்மிகு கவிஞராய்
நிரந்தினி துரைக்கும் நீர்மைநா வலராய்
ஏற்றம் மிகுந்த எழுத்தா ளருமாய்
நாடொறும் நாடி நலம்புரி அமைச்சாய்
நெஞ்சில் பழக்கம் எனும்சால் உழுது
அன்பெனும் வித்திட் டாரத் துய்த்திடும்
அருமைக் கலைஞர் நமைமே லவையில்
இருக்கச் செய்தது என்ன கருதியோ!
நெடிய நேரம் நினைந்த பின்னும்
புலப்பட வில்லை! புலப்பட வில்லை!
நமதுஆ தீன மஃது.அண் ணாமலை
ஆதீ னம்ஆம் அண்ணா என்ற
முதன்மைச் சொல்லில் மூண்ட காதலோ?
பேசும் மொழியால் பெட்புறு நெறியால்