பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3



நாள்வழிக் கவிதைகள்


1. அறிவு

"அறிவுடை யார்எல் லாம்உடை யார்” என
வான்புகழ் வள்ளுவம் மயக்கற உணர்த்தும்!
அறியாமை அகன்றிடக் கற்பன கற்க!
கேட்பன கேட்க: சிந்தனை செய்க
நாடொறும் நாட்டின் நடப்புகள் அறிந்து
படிப்பினை பெறுக! பட்டறி வுறுக!
மானுடத் திற்கு வாய்த்தநற் கருவி
அறிவு'அவ் அறிவினைக் கருவியாக் கொண்டு
வையகத் தின்துன், பங்களை மாற்றி
வெற்றிகாண் பவரே கற்றறி வுடையோர்!
அவமது நீங்கிய அறிவுடை மையினால்
தொடர்ந்த தோல்விகள் வெற்றிக ளாக்கிப்
பசிப்பிணி பகைப்பிணி இவற்றி னின்றும்
வைய கத்தினை மீட்போ மாக!
அறிவுடை யோம்என் றறிந்தே .
உறுதுயர் நீக்கும் அறிவினைப் பெறுகவே!