பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

165


4. நிகழ்வுகளும் காரணங்களும்

உலகம் தழிஇய தொட்பம்என் றறிவோம்!
நாடொறும் நானில மக்கள் வாழ்க்கையில்
நிகழ்வுகள் எண்ணில நிகழ்வுறு கின்றன.
இன்றைய நிகழ்வுகள் இன்றைய விளைவல்ல!
என்றோ ஒருநாள் மானுடம் இயக்கிய
இயக்கத் தாலே வீழ்ந்த வித்துகள்
இன்றைய மகசூ லாயின காண்க!
இன்றைய நிகழ்வு களில்எதிர் கால
நீண்ட வரலா றுள்ளது நினைமின்!
ஆதலின் நாடொறும் அவ்வர லாற்றை
உற்று நோக்குக! உலகம் எங்கே
தங்கு கின்றதோ அங்குத் தங்கிட
முயல்க!வை யத்து முழுவர லாற்றின்
நிகழ்வு களை, அந் நிகழ்வுக ளுக்குப்
பின்னணி யாகப் பிறங்குகா ரணங்களை
ஆய்ந்தறிந் தேநல் லறிஞர் மார்க்சு
மூல தனமெனும் நூலை யாக்கினார்
ஆதலால்,
செய்திகள் செய்திகள் மட்டு மல்ல
உலக நிகழ்வுக் கொவிபரப் பாகும்.
வரலாற் றுக்களம் இந்த வையமே!
ஏழை பணக்கா ரன்எனும் ஏற்பா(டு)
இன்று தோன்றிய தன்(று).அது என்றோ
எண்ணித் திட்ட மிட்ட!ஏற் பாடே!
இந்தஏற் பாட்டிற் குத்தலை விதியைக்
காரண மாகக் காட்டி வைத்தது
ஒருநாட் செயலல! பலநாள் எண்ணி