பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

வாழ்க்கைப் பயணத்தில் அவர் மறைவாகச் செய்த மடைமாற்றம் எத்தனை எத்தனை' எனக் கனிந்துருகுவார்.

சுந்தரசுவாமிகளைத் 'தொண்டனும் 'தூய உயிரினைத் தாங்கித் திருப்பணி நாயகராய் சிறந்தோங்கும் சுந்தரத் தமிழ்' என்பார். கோவிலூர் ஆதீனசுவாமிகளைத் தேவகோட்டையில் தோன்றிய ஞானி; துறவு ஆண்டவர் என்பார். புதிய புறநானூற்றில் பழைய மரபு சார்ந்து கவிதைகளால் வாழ்த்தியல் துறையில் வாழ்த்திய பெருமகனார்.

தமிழ்ச் சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் அரசியலாளர், கவிஞர் எனப் பலதுறை சார்ந்த பல்லோரையும் பல்வேறு சூழல்களில் வாழ்த்திய அவர் கவிதைகள் அவர்தம் பெருந் தகைமையைக் காட்டும்.

நாள் வழிக் கவிதைகள் வழிப் பல்வேறு பண்பு நலன்களையும் நம் தமிழ் மக்களுக்கு வழங்கிய அவர்தம் அன்பு நெஞ்சம்: ஒரு புதிய உலகத்தை உருவாக்க விழைந்தது. “யாரோடும் புகை கொள்ளற்க' என்றார். 'இனிய தேர்க' என்பார். 'இயங்கிக்கொண்டே இருப்பேன்' என்று நமக்குத் தன்னம்பிக்கை ஊட்டினார்: 'இறைவா உன்னுடன் நடந்து வருவேன்; ஒவ்வொரு நாளையும் என்னுடைய நாளாக்குவேன்' என்று தனக்குக் கூறுவது போல் நமக்குக் கூறினார்.

அறிவறிந்த ஆள்வினை உடைய அடிகளாரின் சிந்தனைகள் தமிழ்ச் சமுதாயத்திற்குப் புத்துயிர் ஊட்ட வல்லன. “உணவு உடம்பை வளர்க்கின்றது ஆனால் உணவு மனிதனை உருவாக்கவில்லை” மனிதன் தன்னையே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்' என்று முழங்குவார்.

'உன்னையே நீ அறிவாய்' என்று. சாக்ரடீஸ் கூறியது போல 'உன்னையே நீ ஆள் என்பது அடிகளாரின் தாரக மந்திரம். மனிதனின் விலை என்ன என்று கேட்டு 'உனக்குத் தேவையான ஒருவருக்கு' நம்பிக்கையைத் தருக, அதுவே உன் விலை' என்பார். புறந்தேடும் மளிதனாய் நீயே ஆகுக என்பார்.

மானுடம். மேன்மேலும் வளர்ந்திட அடிகளார் ஆற்றிய அறிவுரைகளும் அருளுரைகளும் புதிய மானுட சமுதாயத்திற்குப் புத்துணர்ச்சி ஊட்ட வல்லன.

அடிகளாருடைய கவிதை நெஞ்சம் சமுதாயப் புரட்சியை எதிர்நோக்குகின்றது. மானுட் மறுமலர்ச்சியைக் களமாகக் கொள்கின்றது. அடிகளாரின் அறிவுரை ‘சிந்தனை செய்க, மூடத்தனம் அகற்றுக, புதிய சிந்தனையுடன் வளர்க, வாழ்க' என்பதாகும். 'உன்னையும் புதுப்பித்துக்கொண்டு உலகத்தையும் புதுப்பித்து உலகத்தை அனுபவித்து மகிழ்க' என்பார் அடிகளார், தேய்ந்த சந்தனக் கட்டையாய் விளங்கும் பெற்றோரின் அருமைப்பாட்டை உணர்ந்து வாழ்க என்பார்.

அருட்தந்தை அடிகளாரின் நாள்வழிக் கவிதைகள் மனித வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டும் நெம்புகோல் கவிதைகள்.