பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


6. கற்பது கடமை

கழிபிணி உடலின் நவிவினை நீக்க
உணவே உரிய நன்மருந் தாகும்!
இடர்தரு நோய்க்கும் இதுவே மருந்தாம்;
உடலினை இயக்கி உறுபயன் கொள்ளலாம்!
உய்யு மாறொரு வாழ்வு வேண்டின்
உயிருறு ஆணவம் ஒழிந்திட வேண்டும்
ஆணவத் தின்படை யாக அமைந்து
கேடுகள் பலசெயும் கீழ்அழுக் காறு அவா
வெகுளிஇன் னாச்சொல் வேண்டும்வேண் டாம்எனும்
வேற்றுமைப் படுத்தும் குணங்க ளோடு
அடக்க மின்மையும் அதிகாரப் பசியும்
எனஇவை யெல்லாம் இன்றிப் பீடுசால்
வாழ்வு வாழ்ந்திட உயிர்க்குறு மருந்து,
வாழ்வெனும் ஆழ்கடல் மூழ்கி அறிஞர்
ஆராய்ந் தெடுத்த அறிவுமுத் துக்கள்
கொழிக்கும்.நன் னுரல்களைத் தெளிவுற நாள்தொறும்
கற்பது நந்தம் கடமை யாகும்.
கற்பவை கற்றுத் தெரித லின்வழி
பெறும்அறி வேநமக் குறுதுணை யாமே.