பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

177


15. மூக்கு

அன்றொரு நாளில் சண்டை வந்தது
சேரிக்குப் பத்தில்! சேற்றினை வாரி
வீசிக்கொண் டதுபோல் பேசிக் கொண்டனர்
ஒருவன், போடா உன்வா சனையே
ஆகா தென்றான்! ஆம்!மா னுடத்தின்
அகவுணர் வுகள்மணம் வீசு கின்றது!
உயர்மண மும்உயிர்க் காற்றும் வாழ்கிற
உயிர்க்குறு பயனை விளைத்திட மூக்கே
முதல்துணை! அந்த மூக்கினால் மணத்தின்
இயல்பினை யறிந்து வகைபட நுகர்ந்து
வாழ்தலே வாழ்வாம்! வாழ்வின் அளவுக்
கருவியும் முக்கே யாம்!அது காட்டும்
வகைமூச் சியக்கமே வாழ்வின் சின்னம்!
உயிர்ப்பின் வழியில் வளியும் பிறவும்
நன்று தீதென அறிந்து வாழ்தலே
மூக்கி னால்பெறும் ஆக்கமாம் அறிவே!