பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


16. நன்றாற்றலுள்ளும் தவறுண்டு!

நாள்தொறும் நலியச் செய்துசா கடிக்கும்
நீரி ழிவுநோ யாள னுக்குக்
கட்டி பட்ட கரும்புமா காது.
நடுக்குறு வெப்பு நோயாள னுக்கு
இனிய குளிர்இள நீருமா காது.
வெட்கமி லாது தன்னலம் பேணி
வாழ்க்கையை வாணிக மாக்கும்மாக் களுக்கும்
ஈரமி லாதநெஞ் சுடைக்கய வர்க்கும்
தகுதிதே டாமல் தலைமை தேடி
அலையும் நிலையி லாக்கய வர்க்கும்
நன்றும் இல்லை; நன்றியும் இல்லை.
அதனால்,
நன்னாற்ற லுள்ளும் தவறுண் டென்ற
திருவள் ளுவர்உரை தேறுக! தெளிகவே!