பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

185


நாள்தொறும் பொருந்தும் பழக்கம் ஏற்பதும்
வாழும் வழியெனும் அறிவுரை தேறுமின்!
உடலியல் வாழ்வுக்கு மூச்சுக் காற்றென
உயிர்நல வாழ்வுக் குகந்தது நாளும்
புத்துணர் வைத்தரு நற்கருத் தாகும்!
கற்றும் கேட்டும் அறிதல் வேண்டும்;
நோயோ டொருநாள் தானும் வாழேல்!
நோயே வாரா வாழ்வே வாழ்வு!
நோய்க் கிடந் தாரா வாழ்வே வாழ்வு!
கடின உழைப்பும் காலத் தோடு
பழக்கிக் கொள்ளும் உடலின் வாழ்வும்
கால மாகிய முதற்பொரு ளுடனே
அறிவ றிந்த ஆள்வின்ைத் திறனால்
உழைத்து ஒண்பொருள் முறையுடன் ஈட்டித்
துய்ப்பன துய்த்து, ஊரும் சுற்றமும்
உவப்ப வாழ்ந்திடின் ஒருநோய் வராது!
இதுவே வாழ்வென இனிதுதே றுகவே!

கு.XIV.13.