பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

191


26. அறிவறிந்த ஆள்வினை!

பூவிரி உலகத்தில் அளப்பிலாப் பொருள்கள்!
எண்ணிய மக்களுக்காகப் பலப்பல பொருள்கள்!
இவையெல்லாம் கடவுளின் சித்தம்!
அழகானவை! பயன்பா டுடையவை!
உலகை உணர்வோனுக்கு
இது அழகும் வாழ்த்துரையுமாகும்!
நல்லவன் நல்லதைப் பெறுகிறான்!
தீயவன் தீமையையே பெறுகிறான்
உலகில் நன்றும் தீதும் இல்லை!
உலகைப் பயன்படுத்துவோர் பாங்கிலேயே
நன்றும் தீதும் இருக்கிறது!
இந்த உலகம் ஒரு கண்ணாடி!
ஆம்! சின்னஞ்சிறு உலகத்தின் இருப்பைக் காட்டும்
                                                 கண்ணாடி!
இந்த உலகில் நல்வாய்ப்புகளும் உண்டு!
ஆனால்,
நிலையிலாத் தன்மை இந்த உலகிற்கு உண்டு!
இந்த உலகு விதிமுறைகளினால் ஆனது!
கடவுள் வாழ்த்துகிறார்! யாரை?
தம்மைத் தாமே வாழ்த்திக் கொள்பவரை!
மரங்கள் வளர்கின்றன!
ஆனால், வீடுகள் வளர்வதில்லை!
உணவு, உடம்பை வளர்க்கிறது
ஆனால், உணவு மனிதனை உருவாக்குவதில்லை!
மனிதன் தன்னையே தான் உருவாக்கிக்
                                      கொள்ளவேண்டும்!
கடவுளின் உதவி கிடைக்கும்
களிமண்ணை நனைத்துப் போடுவாரும் இல்லை!
செங்கற்கள் அதிட்டத்தால் படைக்கப்படுவதில்லை!
அயர்விலா அறிவறிந்த ஆள்வினையே
மனிதனைப் படைத்துப் பாரினில் உயர்த்தும்!