பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

193


28. தென்னை

ஓங்கி வளர்ந்து விரிந்துநிற் குமரம்;
வாழ்க்கைக்கு உறுதி பயக்கும் மரம்;
பெற்ற பிள்ளை சோறு போடாது!
வைத்த பிள்ளை சோறுபோடும் என்ற
புகழினைப் பெற்று விளங்கிடும் மரம்!
தாளில் கிடைத்த நீரினை உண்டு
தலையால் குளிர்நீர் தருகின் றமரம்!
நாளுக்கு ஒன்று உணவும் மருந்துமாம்!
சுவையூறும் தின்பண்டம்
எண்ணெய் ஆட்டினாலும் மணமிக்க எண்ணெய்!
கொழுப்புச் சத்துக் குறைவான எண்ணெய்!
குடியிருக்க வீடமைக்கப் பயன்படும் ஒலை!
உத்திரம் கைக ளாகவும் பயன்படும்;
உணர்ச்சி மிகுதியும் உடைய நன்மரம்;
எண்ணிச் சிலமரம் பேணி வளர்த்தால்
பெருஞ்செல்வம் எய்தலாம்!
இங்ங்னம் பெரும் பயனும் புகழும்
உடைய மரம் எது? அதுதான் தென்னை!
தென்னை வளர்ப்போம்! தேசத்தைக் காப்போம்!