பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


31. அதிட்டமா?

உருளும் உலகில் அதிட்டங்களை நோக்கிக்
காத்திருத்தலினும்
உயர்வாழ்நிலை அளிக்கும் முயற்சியே பெரிது
அதிட்டமும் சிலபொழுது நல்லன சில செய்திடலாம்.
அதனினும், எண்ணிய திட்டமிட்ட முயற்சி பெரும்பயன்
பல அளித்திடும் என்பதறிக.
அதிட்டம் பயிர் வளர்க்குமா? வீடுதான் கட்டுமா!
தொழில்தான் செய்யுமா?
எழுதுகோல் கொண்டு எழுதுமா?
பட்டமும் பெறாது பணமும் தராது.
ஆதலால், பயனுள்ள முயற்சிகளைச் செய்க
வெற்றி பொருந்திய வாழ்வாளன் அதிட்டத்தை விரும்பி
நோக்கான்
அதிட்டம் வாழ்க்கையில் பங்கேற்பதைப் பொறாள்
உன் விதிக்கு நீயே தலைவன்
நீயே அதிட்டங்களை அடக்கி ஆள்க.
உன் அதிட்டத்தை நீயே உருவாக்குக.
நீ செய்க உன் அதிட்டத்தை - உன் வாழ்வை!