பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

201



36. பழகும் பாங்கு!

"ஐயா மாரே! அம்மா மாரே!
தலைமயிரைப் பிய்த்துக் கொண்டு யோசிக்கிறீர்களே,
என்ன செய்தி? ஏன் இப்படி?
வளரும் குடும்பப் பிரச்சினைகளா?
அண்டை அயல் வீட்டார் தரும் பிரச்சினையா?
பிரச்சினைகள் தோன்றாதிருக்க யுத்தி உண்டு!
யுத்தி வெற்றி பெறப் புத்தி தேவை.
ஆம்! மற்றவர்களைப் புரிந்து கொள்!
பலரையும் புரிந்து கொண்டால் அப்பரிசே
பாங்கறிந்து பழகுதல் ஒருகலை.
புரிந்து கொள்வதிலும் அன்புகாட்டுவதிலும்
சோர்வு உள்ளவரை பிரச்சினைகள் ஒயா!
உறுந்துன்பங்களும் குறையா.
மக்களைப் புரிந்துகொள்! அன்பு காட்டு!
மக்களுடன் மக்களாக வாழ்வீர்!
குற்றங்கள் குறையும்! குணங்கள் பல தோன்றும்
புரிந்து செய்யா அன்பு கருங் கல்லிடை பயிர்போல
புரிந்தும் செய்யும் அன்பு நஞ்சையில் பயிர்போல,
புரிந்து கொள்க! பழகுக!”

கு.XIV.14.