பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


39. நம்பிக்கை!

நம்பிக்கையே வாழ்வின் எரிபொருள்
நம்பிக்கை வை!
நல்லன என்று நம்பு! உண்மையெனக் கருது!
நல்லனவற்றில் எதிர்பார்ப்புப் போதாது!
நம்பிக்கை என்ற தடத்தின் வழியில்தான்
நல்லன நடந்திடல் வேண்டும்!
ஐயங்கள் ஐராவதம் ஏறத்துணை செய்யா!
ஊசலாட்டங்கள் உலகை வென்றதில்லை!
நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்கு;
நரகமும் சொர்க்கம் ஆகும்;
நம்பிக்கையின்மை சொர்க்கத்தையும் நரகமாக்கும்!
நம்பிக்கையே வாழ்வு!
நம்புக! நம்புக!