பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

215


49. எது புகழ்?

ஒ... மனிதனே!
உன் நிழல் உன்னைத் தொடர்ந்து வரும்படி செய்ய
முயற்சி செய்கிறாயா?
இம்முயற்சி வீண்!
நட கதிரவனை நோக்கி நட!
நடந்து கொண்டே இரு! நின்நிழல் உன்னடியில்
தொடரும்!
புகழினை விரும்பி ஓடாதே!
புகழினை விரும்பித் தேடினால் நடிக்க வேண்டியிருக்கும்!
ஆனால்,
புகழுக்குரிய தகுதியோ இல்லை!
உண்மையும் பணிவும் புகழுக்குரிய பண்புகள்!
தன்னலமின்மை தரணியில் புகழினைச் சேர்க்கும்!
உன்னையே, நீ நினைந்து புகழினைப் படைத்துக்
கொள்ளாதே!
அழகும் மணமும் விரிக்கும் மலரனையது புகழ்!
புகழ், தேடினால் கிடைக்காது!
தேடிப் பெறுவது புகழன்று!
மானுடத்தை விரும்பு உண்மையாக விரும்பு!
அடக்கமாக அணைத்து அவர்தம் நலனுக்கு முயலுக!
இம்மண் சிறக்கும்!