பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/229

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

217


51. மனித மதிப்பிடு!

ஒ... மனிதனே!
நீ யார்? உனக்குரிய மதிப்பென்ன?
ஒகோ, உன் மதிப்பீடா?
உனக்கு நீயே செய்து கொண்ட மதிப்பீடா?
"சகல கலாவல்லவன்", "நினைத்ததை முடிப்பவன்”
இது உன் மதிப்பீடா?
நாள்தோறும் முகம் பார்க்கும் கண்ணாடி
இவை உனக்கு உண்டு என்று ஒத்துக் கொள்கிறதா?
இல்லை! இல்லை!
கண்ணாடி காட்டுவதை நாம் நம்ப விரும்பவில்லை!
மதிப்பீடு யார் செய்வது?
உன்னோடு வாழ்கிறவர்கள் உன்னை மதிப்பிட வேண்டும்
உன்காலத் தலைமுறை,
உன்னைத் தேவையென்று விரும்பி ஏற்க வேண்டும்.
நீ யார்? உன்னை ஏற்று அங்கீகரிப்பவர் யார்?
உன் உறவினர்; உன்னைச் சுற்றித் திரியும்
பொறுக்கித் தின்னிகள்!
இதற்கா இவ்வளவு தம்பட்டம்!
புவியை இயக்கும் புண்ணியர்
உன்னை ஏற்கும் நாளே, நீ வாழும் நாள்!

கு.XIV.15.