பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/235

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

223


57. பொறுப்பும் அலட்டலும்!

அருமை நண்பனே!
பொறுப்பேற்றுக் கொள்!
ஆனால், அலட்டிக் கொள்ளாதே!
பணிகளில் ஊக்கம் மிகுதியும் காட்டு!
பொறுப்பேற்றுக் கொண்டவற்றை
அக்கறையுடன் ஆர்வத்துடன் செய்க!
ஆயினும், இயன்றவரை அமைதியாக இரு!
சிக்கல்கள் தீர்வுக்கு என்றும்
பரபரப்பும் பதற்ற நிலையும் உதவியதில்லை!
பரபரப்பும் பதற்றமும்
மேலும் மேலும் சிக்கல்களைத் தோற்றுவிக்கும்!
அலட்டிக் கொள்ளுதல் மூளையில் அமுக்கத்தை
உருவாக்கும்!
மனத்தின் கண் மூடிப்போகும்!
அலட்டிக் கொள்ளுதலிலும் துன்பம் யாதுளது?
வேற்றுமைகள் சிக்கல்களைக் காண்பதில்லை!
அலட்டலே சிக்கல்களைப் பிணைக்கின்றன!
ஆனால்,
பொறுப்பும் அலட்டலும் ஒருசேரப் பயணம் செய்யா.
அதா அன்று,
உன் பணியைத் திறமையுடன் செய்க.
நம்பிக்கையோடு இரு! கடவுளிடம் அடைக்கலம் புகுக!
எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்க!
ஆனால், எதையும் அலுப்புடன் செய்யாதே!
அழியா மனிதன் என்றும் செய்வான்!
நேற்றுச் செய்ததிலும் கூடுதலாகவே செய்வான்!