பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

227


61. சிந்தனை செய்க!

ஒருநாள் ஒருவன் மூடுபனியின் மீது
அதற்கென்று மனம் என்ற ஒன்று இல்லாதிருந்தான்!
விழிப்புணர்வுடன் தெரிந்து கொள்!
உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது!
உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே!
தேடு! ஆழமாகத் தேடிக் கண்டுபிடி!
நெடிய நோக்குடன் பார்!
அயலவருடைய ஆலோசனையைப் பெறு!
சிந்தனை செய்க! சிந்தனை செய்க!
தொகுத்தும் வகுத்தும் ஆய்வு செய்க!
அறிவுபூர்வ மான முடிவுகளைப் பெறுவாய்!
சிந்தையில் தெளிவு மனிதனை மனிதனாக்குகிறது!
தெளிவு, நல்லவனை மேலும் நல்லவனாக்குகிறது!
பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறது.
தவறாகப் புரிந்து கொள்ளுதல் குற்றமல்ல
புரிந்து கொள்ளாமலே இருப்பதை விட
ஒருங்கிணைந்த சிந்தனைப்பார்வை தேவை:
பொருள்களை அறிக! நிகழ்வுகளை உணர்க!
தெரிந்து கொள்ளுதல் செயலுக்கு முதற்படி
தெரிந்து கொண்டதைவிட எதுவும் செய்ய இயலாது.
அறிவுச் சார்பிலாத முடிவுகள்
குருட்டுத் தனமான ஊகங்களே!
எதற்கும் ஆகாதவை
அறிந்தவைகளிலிருந்தே காரணங்கள் தோன்றுகின்றன
அறிக! தெளிக!
விழிப்புணர்வுடன் அறிக! செயற்படுக!