பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




66. தாய்!

சின்னஞ்சிறு பாப்பாவின் வினா-
எங்கே உன் வீடு?
மழலையிடம் சிறுவன் தந்த விடை -
எங்கே தாய் இருக்கிறாளோ, அதுவே வீடு!
ஆம்! தாய் நற்பண்புகளின் வைப்பிடம்
வீட்டை உருவாக்கித் தருபவள் தாய்!
தாய்! அம்மம்ம! எவ்வளவு கடமை உணர்ச்சி!
ஈ, கொசு மொய்க்காமல் காக்கும் இரவுக்காவல்
தன்னலமறுப்பின் அடையாளம் தாய்!
கண்மணியின் கண்ணீருக்கு
முதலுடன் வட்டி கூட்டிய கண்ணீர்!
அந்த அணைப்பில்தான் எவ்வளவு மகிழ்ச்சி!
வேண்டுவன எல்லாம் வழங்குபவள் தாய்!
வறுமை நிறைந்த வீட்டையும்
பெருமைக்குரிய தாக்கும் பெற்றிமை,
தகைசால் தாயின் பெற்றிமை!
எளிமையும் அர்ப்பணிப்பும்
தாயிடமிருந்து வெளிப்பேர்ந்த பண்புகளே!
தாயுள்ளத்தில் எப்போதும் 'ஒருமை ' இல்லை;
பன்மை உணர்வே ஆட்சி செய்யும் இதயம்;
தாய் இருந்தால் வீடு! அதுவே மகிழ்ச்சி!
மூவுலகிலும் போற்றப் பெறும் சொற்கள் மூன்று:
சொற்கள் வேறுவேறு ஆனாலும்
பொருளும் பயனும் ஒன்றேயாம்:
தாய், வீடு, விண்ணகம்,
இம்மூன்றுமே அச்சொற்கள்
இவற்றுள்ளும் தாயே
போற்றி அனுபவித்தற்குரிய அரிய இன்பம்!