பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/246

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




68. நாள்!

அன்றொரு நாள்
விவசாயி ஒருவன் மருத்துவ மனையில்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் கிடந்தான்!
ஒருநாள் உணர்வுநிலை அவனுக்கு வந்தது:
உடன் அவன் எழுப்பிய வினா
இது என்ன பருவகாலம் என்பது
மருத்துவத் தாதி மழைக்காலம் என்றாள்;
மழையும் பெய்கிறது என்றாள்;
உடன் நோயில் கிடந்த விவசாயி
இது மழைக்காலம் நான்சாக மாட்டேன்
இது உழவுக் காலம் என்றான்!
ஆம்!
நம் எல்லோருக்கும் இது உழவுக் காலமே!
இந்தக் காலம் ஒன்றே நம்மை
ஒருங்கிணைத்து வைத்துள்ளது!
இந்த நோக்கில்
இன்றையநாள் நமது நாள்!
நாளையும் கூட இன்று வந்தால்
நமது நாளாகும்!
நாளை என்று நாளைத் தள்ளாதீர்!
இன்று வாய்த்த நாளை வாழ்வாக்குகவே!