பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

245


79. மனிதன் கிடைப்பானா?

இன்றைய தேவை மனிதன்!
மானுடத்தைப் பற்றி அலைக்கழிக்கும் அவலங்களை
அடியோடு அகற்றிப்
புதியதோர் உலகம் செய்ய மனிதன் தேவை!
தன்னையே தெரிந்து தன்னையே ஆளாத
மனிதக் கூட்டம் என்ன செய்ய இயலும்?
உண்ணவும் உறங்கவும் சாறும்?
நமக்குத் தேவை மனிதன்!
உலகவர்முன் நிற்கக் கூடிய மனிதன் தேவை!
இந்த உலகம் திருந்துதலுக்கு உரியதன்று!
உலகைப் புதுப்பிக்க வேண்டும்!
துறைதோறும் புதுவடிவம் தந்தாக வேண்டும்!
இதனைச் செய்யக்கூடிய மனிதன்தேவை!
புதியதோர் உலகைச்
செய்து முடிக்கும் மனிதன் தேவை!
புதியதோர் உலகம் அமைக்கும் பணி எளிதன்று!
பழைமையின் போர்க்குரல் கேட்டுப்
பின் வாங்காத பேராண்மையுடைய மனிதன் தேவை!
நெஞ்சில் உறுதியும் போர்க்குணமும் உடைய
மனிதன் தேவை!
உலகத்தைத் திருத்துவோனை உலகம் விடாது!
உலகத் தொல்லைகளைத் தரும்!
இடர்ப்பாடுகளின் இடையில் நொறுங்கிப் போகும்
மனிதன், ஜந்து:
என்ன செய்வான் பாவம்!
புதிய சமுதாய அமைப்புக் களத்தில்
பலவீனன் களத்தை இழக்கிறான்!
தன்னையே இழக்கிறான்!
ஐயோ, பாவம்! உலகம் இழப்பைச் சந்திக்கிறது!
இன்றைய தேவை மனிதன்!
மனிதன் கிடைப்பானா?