பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


80. சமூக பலம் - மனிதன்!

நமது காலத்தின் தேவை ‘மனிதன்'
ஆம்!
பலவீனத்திலிருந்து பலம் உருவாவதில்லை!
ஒப்பற்ற மானுட சமுதாயம் தோன்ற
மனிதன் தேவை!
ஒப்புயர்வற்ற உலகத்தின் ஆட்சியைக் காண
மனிதன் தேவை!
தன்னை ஆளத் தெரியாத
அவலச் சிக்குப் பிடித்த
இருகால் விலங்குகள் என்ன செய்ய இயலும்?
நமக்குத் தேவை மனிதன்!
இந்த உலகத்தின் முன்னே நிற்கக் கூடிய
மானிடன் தேவை!
இந்த உலகத்தைப் புதுப்பிக்கவும்
புத்துருவம் கொடுக்கவும்
ஒரு மனிதன் தேவை!
‘முடியும்’ - எனும் மனிதன் தேவை!
‘கூடும்’ கொள்கையுடைய மனிதன் தேவை!
செய்து முடிப்பதையே
குறிக்கோளாகக் கொண்ட மனிதன் தேவை!
ஒருபொழுதும் பின் வாங்காத
பெருந்தகை தேவை!
பலவீனனுக்கு வாழ்க்கைப் போர்க்களத்தில்
ஏது மன உறுதி?
உலகம் அவனை உதைக்கும் பொழுது
வளைந்து நொறுங்கிப் போவான்!