பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/261

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

249


82. ஆடும் நாற்காலி!

தாய்க்குப் பலப்பல பணிகள்!
மழலைகள் வீட்டிற்கு வெளியே செல்லாது
பாதுகாக்கப் படுதல் வேண்டும்!
தாய் என்ன செய்தாள்?
ஆடும் நாற்காலி ஒன்றினைக் கண்டுபிடித்தாள்!
ஆடும் நாற்காலியில் மழலைகள்!
கனவுகளையும் துன்பங்களையும் மறந்தாள்!
மழலைகளுக்கு ஒழுக்கம் வளர்ந்தது!
மழலைகள் உயர் எண்ணங்களுக்கு உரியவரானார்!
இதயத்தின் இரக்கம் விரிவடைந்தது!
உறுதி மொழிகள் காப்புறுதியாயின!
படுக்கையிலும் அமைதியாக உறங்கினாள்!
ஆடும் நாற்காலி பல கலைகளின்
வகுப்பறையாக,
விரிவுரை மண்டபமாக
நூலகமாக
இன்னபிறவாகப் பயன்பட்டது!
ஆடும் நாற்காலியின் சிறப்பை
எடுத்துக் கூற மொழிகள் ஏது?
புவிக்கோளமே சிறந்த பள்ளிக் கூடம்!
தாயே உயர் ஆசிரியர்!
தாய்தந்த ஆடும் நாற்காலியே
கற்கும் பாடம்!

கு. XIV. 17.