பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/281

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

269


99. கசப்புணர்வு

ஏன் கசப்புணர்வு கொள்கிறாய்?
என்ன குடியா முழுகிப்போய் விட்டது
எந்தச் சூழ்நிலையிலும் உன் வாழ்நிலையைக் கெடுக்கும் கசப்புணர்வை ஏற்க வேண்டாம்
வெறுக்கத்தக்கதேயாயினும்
இதயப்பாதிப்பே ஏற்பட்ட சூழ்நிலையிலும்
அச் சூழ்நிலையை நன்மையால் மாற்றுக!
கசப்பு, கசப்பை ஈர்க்கும்!
கசப்புணர்வு தனக்குத்தானே உரமூட்டிக் கொள்ளும்
உயர்நிலை சார்ந்த அன்பை,
நாகரிகம் செறிந்த சீர்மிகு வாழ்க்கையைக்
கசப்புணர்வு கெடுக்கும்!
கசப்புணர்வுக்குரிய நியாயங்கள் இருக்கலாம்!
அவர் நிலைக்கு அதுசரியே என்று வாதிடலாம்?
அது உண்மையே யாகுக!
உண்மையில்லாமல் போனாலும் போகட்டும்!
துன்பம் தொடர்ந்து தாக்காமல்
மனிதன் குடிக்கிறான்!
குடிமயக்கத்தில் துன்பம் மறந்து போகிறது!
வாழ்நிலையில் இன்பம் காணும் உணர்ச்சி
ஆனால், இன்பம் இல்லை; உணர்ச்சியின் அளவே!
ஆனால், கசப்புணர்வு கொண்ட மனிதனிடத்தில்
எந்த சென்மத்திலும் மாற்றம் ஏற்படுத்தாது!
வேண்டாம் கசப்புணர்ச்சி!