பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/289

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

277


107. உன்னை மாற்றிக்கொள்!

உன்னுடன் இருப்பவர்தம் குற்றங்களை
குற்றங்களின் விளைவாகிய குறைகளை
பழக்க இயல்பால் காணும் குறைகளை
எடுத்துக் கூறுவதைத் தவிர்த்திடு!
ஓடும் வண்டிகளின் சக்கரங்கள்
பழுதுறின் ஒலிக்கும்!
ஓடும்பொழுது ஒலிக்கும் சக்கரங்கள்
கிரீஸ் கூடுதலாகவே கேட்கும்!
ஆயினும் என்? சிலநாள்களில் ஓடாது நின்றுவிடும்!
அதுபோல, பணிகள் செய்யும் பாங்கில்
குறைகள் சொல்விப் பழகுவார்
காலப்போக்கில் பணிசெய்யும் கவினுறு திறமையை
இழப்பர்
உன்னால் மாற்ற முடியாததைப் பற்றிப் பலபடக் கூறி
என்ன பயன்
எந்த மனிதர்களுடனும் ஒத்துப் போதல் பயன்மிகுதி !
குறை கூறுவதால் பயனே இல்லை!
ஒத்துப்போ! உன்னை மாற்றிக்கொள்!
எந்தச் சூழ்நிலையையும் இசைந்ததாக ஆக்கிக்கொள்!
இந்த உலகத்தின் தட்ப வெப்பங்கள்
மாறி மாறி வருகின்றன!
உடலுக்கு ஒத்து இன்பம் தராத
கடுங்கோடையும் கடுங்குளிரும் கூட
வரத்தான் செய்கிறது:
நாம் என்ன கோடையின் வெப்பத்தையா மாற்றுகிறோம்?
அல்லது கடுங்குளிரைத்தான் மாற்ற முயலுவோமா?
இல்லை! இல்லை!
நமது உடைகளை மாற்றுவதன் மூலம்