பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/292

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


109. தந்தையைப் போற்று!

தந்தை அன்பு இதயம் உடையவர்.
பெண்ணினும் பெருந்தக்க அன்புடையவர் தந்தை!
ஆயினும் தாயைப் போலத் தந்தை
தனது அன்பை நிருபணம் செய்ய இயலாது!
ஒருவன் வாழ்க்கையில் தந்தையின் பங்கு
உறுதிப்பாடுடைய உள்ளம் வழங்கல்;
போர்க்குணமுடைய வனாக்குதல்;
எதற்கும் எந்தச் சூழ்நிலையிலும்
ஆயத்தமாயிருக்கச் செய்தல்;
வாழ்க்கைப் போராட்டத்தை மென்மைப்படுத்துதல்!
தந்தை புறத்திணை ஒழுக்கம் பூண்டவர்!
ஓயாத வாழ்க்கைப் போராட்டம்;
ஏன் போராட்டம்?
தன்னால் நேசிக்கப் படுபவர்களைக் காக்க
வாழ்நாள் முழுதும் போராட்டம்!
தன்னால் நேசிக்கப் படுபவர்களுக்காக
ஓயாத போர்ாட்டம்!
தந்தையின் இதயம் தங்கம்
ஆயினும் இந்தத் தங்கத்தை
உலகம் காணத் தவறுகிறது!
நாள்தோறும் வாழ்க்கைப் போரை
நடத்துபவனே தந்தை!
அச்சமின்றி
உனக்காக உன்தந்தை போராடியது அதிகம்!
தந்தையைப் போற்று!