பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/297

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

285


114. காலக் கடிகாரம்

ஒ, மனிதனே!
உன் வீட்டுச் சுவரில் கடிகாரம் தொங்குகிறது!
அதன் முட்கள் நகர்கின்றனவா? ஒடுகின்றனவா?
கடிகாரத்தின் முட்கள் நகர்வதில்லை.
மெதுவாக நகர்வதாகத் தோற்றம்! முடிவாக ஒட்டமே!
கடிகாரம் ஒடும் ஓசை "டிக் டிக் டிக்”
காதில் விழுகிறதா? விழவில்லையா?
கடிகாரம் ஒடும் ஓசை இசையா, என்ன?
இல்லை! இல்லை!
அது மனிதனைப் பார்த்துத் திட்டும் குரல்!
ஓ, மனிதனே!
எவ்வளவு நேரம்தான் குற்றம் குறைகளையே
பேசித் தீர்ப்பாய்!
வாழ்நாள் ஒட்டைக் குடத்தில் அட்டிய நீரென
ஒழுகுவதை உணரமாட்டாயா?
ஏன்? போதும் போதும் புறம் பேசும் பழக்கமும்
பொல்லாங்கு பேசித் திரிதலும்!
இன்றே இப்போதே நல்லதைச் செய்
காலங்கடந்த பாங்கிலேயே
நன்மை தீமை நிர்ணயிக்கப்படுகின்றன!
இந்த மண்ணில் காலமே சிறந்த பொருள்!
காலமே வாழ்வு.! வாழ்வே காலம்!
ஒன்றின்றிப் பிறி தொன்றில்லை!
காலத்தை வாழ்வாக்குக! வாழ்க்கையின் ஆக்கமாக்குக!
வாழ்க்கையைக் காலத்தின் பயனாக்குக!