பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/303

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

291


120. எது சுதந்திரம்?

ஜகத்தில் உயர்ந்த ஜனநாயகத்தைக் காப்போம்!
ஜனநாயக முறைகளைக் காக்க உறுதிபூணுவோம்!
மக்களை நம்ப வேண்டும்!
மக்கள் தங்களைத் தாங்களே கணித்துக்
கட்டுப்படுத்திக் கொண்டு ஆட்சிசெய்து கொள்வோம்
என்ற அசையா நம்பிக்கையே ஜனநாயகத்தின்
அடித்தளம்.!
இந்த ஜனநாயகம் புனிதமான தத்துவம்!
வீரர்களின் செங்குறுதியில் குளித்து எழுந்த கொள்கை!
மனத் துணிவுடைய மகளிரின் கண்ணிரால் கழுவப் பெற்ற
கொள்கை
இந்த உயரிய ஜனநாயகத்தை
நமது தவறுகளாலும் செயலின்மையாலும்
அழியவிடக் கூடாது!
ஜனநாயகத்தின் வெற்றி மக்களிடத்தில் இருக்கிறது!
மனித சமூகமும் அரசும்
ஜனநாயகத்தின் பிரிக்கப்படாத பகுதிகள்!
தன் கட்டுப் பாட்டில் வளரும் அரசியலில்
தங்களைத் தாங்களே ஆட்சி செய்து கொள்ளும்
அரசைக் கண்டு முறைப்படுத்தும்
ஜனநாயகம் எல்லாரையும் மதிக்கும்! -
சமூக மதிப்பீடும் உண்டு தனிமனித மதிப்பும் உண்டு!
உண்மையான சுதந்திரம் சுதந்திரத்துக்கு இல்லை!
சுதந்திரம் எதற்காக என்பதே கேள்வி: .
உண்மையான குறிக்கோளில் சுதந்திரம் அடங்கும்!
சுதந்திரம் பிறருக்குத் தீமை செய்வதற்கல்ல!
சுதந்திரம் பிறருக்கு நன்மை செய்வதற்கே
சுதந்திரத்தின் மறுபெயர் உதவி!
மனிதநேயம் சமுதாயத்தைக் கட்டுமானம் செய்கிறது!