பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

19


ஆழப் பதிந்தது. முந்தையோர் கண்ட
மூதறி வோடு புதுப்புது அறிவும்
கண்டார்! கருக்கிருள் இடைஎழு ஞாயிறு
அனையநம் அப்பர் அடிகளுக் குச்சிலை
கண்டோம்! அவர்தம் கருத்தினை மறந்தோம்!
உலகு புகழும் உயர்வள் ளுவத்திற்கு
உரைபல கண்டோம்; உய்த்துணர்ந் தோமிலை!
அண்ணல் காந்திக்கும் அக்கதி தானோ?
எண்ணிடு வீர், தமிழ் மக்காள்! நீவிர்
ஒன்று பட்ட பாரத நாட்டை
உயர்வு தாழ்வற்ற ஒப்பில் லாத
சமுதா யத்தைக் கம்பன் சமைத்த
களவும் காவலும் அற்ற இராம
நாட்டினை நாட்டிக் காணிக்கை யாக்குவீர்!
கவிஞர் காள், கவி பொழிய வந்தோரே!
பண்டுதொட் டிற்றை நாள்வரைக் கும்நீர்
கவிசொலக் கேட்ட செவியுறு நாடிது.
எனினும்,
எந்தமக் கெய்திய குறையொன் றுண்டு
நுந்தம் பாட்டின் நுவல்பொருள் அதுதான்
மாறிய துண்டோ? வார்த்தையை வாக்கை
மாற்றிட வேண்டா. எந்தம் வாழ்க்கையை
மாற்றிடப் பாடுக, வளச்சொல் தொடுத்தே!
கடவுளைப் பாடா தீர், இனி அவன்தொழில்
பாடுக! கோடி தொகுத்தவர் தம்மைப்
பாடிட வேண்டா, கோடி குவித்த
உழைப்பா ளியினைப் பாடுக, பாடுக!
விண்ண கத்தினைப் பாடுதல் போதும்;
மண்ண கத்தினைப் பாடுக பாடுக;
அகந்தை கொண்ட 'ஆத்மா'க் களைஇனிப்